பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்;
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளன. பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு,மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
இது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும். ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் உங்களால் மேற்கொள்ளப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரச்சாரம் உங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புகிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
இந்தியாவின் புகழ்பெற்ற பிரதமரான மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் . அவர் தனது தலைமையில் நாட்டில் முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கு வலிமையைக் கொடுத்துள்ளார், மேலும் உலகம் முழுவதும் இந்தியாவின் கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் புதிய உயரங்களை வழங்கியுள்ளார். கடவுள் நலமுடன் நீண்ட காலம் வாழட்டும்.என தெரிவித்துள்ளார்.