பெங்களூருவில் 5 நாட்கள் மின்தடை

பெங்களூருவில் ஐந்து நாட்களுக்கு மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-08-17 16:35 GMT

பெங்களூரு:

பெஸ்காம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெஸ்காம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 18-ந் தேதி(அதாவது இன்று) முதல் 22-ந் தேதி வரை பெங்களூருவில் சில இடங்களில் மின்தடை அமலில் இருக்கும். அதன்படி இன்று காலை 10 மணி முதல் பெங்களூரு கோகுலா, எச்.எம்.டி. மெயின் ரோடு, யஷ்வந்தபுரம் மெயின் ரோடு, மத்திகெரே, ஜே.பி.பார்க், எஸ்.பி.எம். காலனி, எச்.எம்.டி. லே-அவுட் ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.

19-ந் தேதி(நாளை) கிறிஸ்டியன் யுனிவர்சிட்டி, தாவரகெரே, செயின்ட் ஜான்ஸ் ஹாஸ்டல், அசஞ்சர் பில்டிங், செயின்ட் ஜான்ஸ் வுட் அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும், 20-ந் தேதி அரேஹள்ளி, இட்டமடு, ஏ.ஜி.எஸ். லே-அவுட், டி.ஜி. லே-அவுட், ராமஞ்சனேயா நகர், புவனேஸ்வரிநகர், ஒசகெரேஹள்ளி, மூகாம்பிகை நகர், கமக்யா லே-அவுட் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். 21, 22-ந் தேதிகளில் பி.டி.எம். லே-அவுட், குரப்பனபாளையாவில் மின்தடை அமலில் இருக்கும்.

இவ்வாறு பெஸ்காம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்