பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் பயணம்

பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்ல உள்ளார்.

Update: 2024-09-11 21:04 GMT

ஸ்ரீநகர்,

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் வரும் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் வரும் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளன.தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி அடுத்தவாரம் காஷ்மீர் செல்கிறார். அடுத்த வாரம் 19ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள ஷேர் இ காஷ்மீர் பூங்காவில் நடைபெறும் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பிரசார பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று பாஜக நிர்வாகி சையது யூசுப் ஷா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்