சிறு தானிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு
இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான சிறுதானிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான சிறுதானியங்கள் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் 15 வகையான சிறுதானியங்களின் தரத்தை மதிப்பிட எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இந்தியா 8 தர அளவுருக்களை நிர்ணயித்து நல்ல தரமான சிறுதானியங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரமான ஸ்ரீ அன்னா தயாரிப்புகளை (சிறுதானியங்களை) ஊக்குவிப்பதற்கான முக்கிய படி" எனக் குறிப்பிட்டுள்ளார்.