சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை செய்தவருக்கு பிரதமர் மோடி பாராட்டு

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணணை செய்தவருக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-05 18:45 GMT

பெங்களூரு:

கிரிக்கெட் போட்டிகளை தமிழ், ஆங்கிலம், இந்தியில் வர்ணனை செய்வதை நாம் கேட்டு, அறிந்து இருப்போம். ஆனால் பெங்களூருவில் ஒருவர் சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்து உள்ளார். அவருக்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு கிரிநகர் பகுதியில் வசித்து வரும் உப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமி நாராயண். இவரது வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் சில வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அதனை சிலர் வேடிக்கையும் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது பந்தை பேட்டால் அடித்து விட்டு வாலிபர்கள் ரன் எடுக்க ஓடுவதையும், பந்து வீசுவதையும், பேட்டிங் செய்வதையும் லட்சுமி நாராயண் சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்து வீடியோ எடுத்து இருந்தார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டி தனது பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில், 'சமஸ்கிருதத்தில் கிரிக்கெட்டை வர்ணனை செய்ததை பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சியை மேற்கொள்பவருக்கு வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியின் பாராட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்