இந்திய பிரதமர் மோடி - வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்திப்பு...!
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.;
டெல்லி,
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது.
இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவை மேம்படுத்துதல், வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல், மொரிஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜுக்னதை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.