டெல்லி - தாய்லாந்து விமானத்தில் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்
டெல்லி - தாய்லாந்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து தாய்லாந்து நாட்டின் ஃபுகெட் நகருக்கு இண்டிகோ விமானம், புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,
'டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் 'ஹைட்ராலிக்' தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
அதனால் விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஃபுகெட் செல்லும் பயணிகளுக்கான மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.