பெரியார், அம்பேத்கரின் கொள்கைகள் சமத்துவத்திற்கு வழிவகுக்கும் - கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா
பெரியார், அம்பேத்கரின் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் வழிவகுக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் வழிவகுக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள சித்தராமையா, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, தான் பெரியார் சுதந்திரப்போராளி என்றும் அவரின் கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் வழிவகுக்கும் என்றும் கூறினார்.