அரியானா: தொடர் மின் திருட்டு; 3 நாட்களில் 3 ஆயிரம் வழக்குகள் பதிவு - ரூ.9.82 கோடி அபராதம்
அரியானாவில் தொடர் மின் திருட்டில் ஈடுபட்டதாக 3 நாட்களில் 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.;
சண்டிகர்,
அரியானா மாநிலத்தில் நடைபெறும் மின் திருட்டை தடுக்க மாநில அரசு மின் பகிர்மான கழகம் சார்பில் கடந்த 15-ம் தேதி புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி, சுமார் 500 குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டன. அதில், பல நிறுவனங்கள், தனி நபர்கள் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த 3 நாட்களில் 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மின் திருட்டில் ஈடுபட்டதற்காக மொத்தம் 9 கோடியே 82 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநில மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.