அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்

அரசு அலுவலக கட்டிடத்தின் அடித்தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடியே 31 லட்ச ரூபாய் பணம், 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-20 06:29 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அடித்தளத்தில் இருந்து 2.31 கோடி ரூபாய் பணம் மற்றும் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர் அடித்தளத்தில் உள்ள அறையை திறந்தபோது அங்கு ஒரு சூட்கேசில் பணம், தங்கம் இருந்துள்ளது.

இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பணம், தங்கத்தை கைப்பற்றி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 2.31 கோடி ரூபாய் பணம் 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற உள்ளோம் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ள நிலையில் அதேநாளில் 2.31 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்