யாரும் விலைக்கு வாங்க முடியாது ராகுல்காந்தி ஒரு போர்வீரன் பிரியங்கா புகழாரம்

ராகுல்காந்தியை வாங்க முடியவில்லை. இனிமேலும் வாங்க முடியாது.

Update: 2023-01-03 20:00 GMT

காசியாபாத்,

உத்தரபிரதேசத்துக்குள் நுழைந்த ராகுல்காந்தி பாதயாத்திரையை காசியாபாத் எல்லையில் பிரியங்கா வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

என் அண்ணனை பாருங்கள். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், மத்திய அரசு எல்லா அழுத்தமும் கொடுத்தது. அவரது நற்பெயரை கெடுக்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்தது.

இருப்பினும், அவர் உண்மையின் பாதையில் இருந்து விலகவில்லை. விசாரணை அமைப்புகள் முடுக்கி விடப்பட்டன. அவர் பயப்படவில்லை. அவர் ஒரு போர்வீரன்.

அம்பானி, அதானிகள் எத்தனையோ அரசியல் தலைவர்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், ஊடகங்களையும் விலைக்கு வாங்கினார்கள். ஆனால், ராகுல்காந்தியை வாங்க முடியவில்லை. இனிமேலும் வாங்க முடியாது.

இந்த குளிர்காலத்தில் கூட ராகுல்காந்திக்கு குளிர் தெரியவில்லை என்று பலரும் சொல்கிறார்கள். அவர் வாய்மை என்னும் கவசத்தை அணிந்து இருப்பதால்தான் குளிரவில்லை.

அவர் வெறுப்பு சந்தையில் அன்பை பரப்ப கடை திறந்துள்ளார். அவரை பின்பற்றி உத்தரபிரதேசத்தில் ஒவ்வொருவரும் அன்பு கடையை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்