கியாஸ் சிலிண்டர் தர மறுத்த பெண்ணை மானபங்கம் செய்தவருக்கு ஓராண்டு சிறை

கியாஸ் சிலிண்டர் தர மறுத்த பெண்ணை மானபங்கம் செய்தவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டுல் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2023-03-07 04:30 GMT

சிவமொக்கா-

மானபங்கம்

சிவமொக்கா(மாவட்டம்) டவுன் திப்பு நகரை சேர்ந்தவர் அப்சர் பாஷா(வயது 26). கடந்த 2017-ம் ஆண்டு இவர் தனது வீட்டில் இருந்தார். அப்போது இவரது வீட்டில் சிலிண்டரில் கியாஸ் தீர்ந்துவிட்டது. இதனால் இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான பெண்ணிடம் கியாஸ் சிலிண்டர் இருந்தால் தந்து உதவுமாறு கூறினார். ஆனால் அந்த பெண் கியாஸ் சிலிண்டரை கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்சர் பாஷா, அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்டார். மேலும் மானபங்கம் செய்தார். இதனால் அந்த பெண் மனமுடைந்தார்.

ஓராண்டு சிறை

பின்னர் அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து துங்கா நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்சர் பாஷாவையும் கைது செய்தனர். பின்னர் அவர் மீது சிவமொக்கா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் வழக்கில் குற்றவாளியான அப்சர் பாஷா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்