டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி; 36 பேருக்கு பாதிப்பு

உன்சூர் தாலுகாவில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில் 36 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-11-11 17:42 GMT

மைசூரு:-

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக அனகோடு, சின்னசோகே மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமாக உள்ளது. அதன்படி இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 36 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சின்னசோகே கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர்(வயது 52) என்பவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். மேலும் 7 பேர், சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்காரணாக மைசூரு மாவட்டம், உன்சூர் தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடு வீடாக சென்று மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவலால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்