சுதந்திர தினவிழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது

Update: 2022-08-13 02:39 GMT

ஸ்ரீகாளஹஸ்தி:

ஆன்மிக தலத்தில் தேசபக்தியைப் போற்றும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நுழைவு வாயிலில் உள்ள பிக்க்ஷால கோபுரம் மீது 60 அடி உயரத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசியக்கொடியை கோவில் வளாகத்தில் உள்ள பல கோபுரங்கள் மீது பறக்கவிடப்பட்டன.

கோவில் வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் கோபுரம் மீது தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது இதுேவ முதல் முறையாகும். மூவர்ணத்தில் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த மின் விளக்குகள் நேற்று இரவில் ஜொலித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அது பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை நாம் கொண்டாட உள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரே விழா சுதந்திர தின விழா தான் என்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்