துப்புரவு பணியாளர் தினத்தை முன்னிட்டு கோலார் தங்கவயலில் விளையாட்டு போட்டிகள்
துப்புரவு பணியாளர் தினத்தை முன்னிட்டு கோலார் தங்கவயலில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று கோலார் தங்கவயல் நகரசபை கமிஷனர் மாதவி தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
துப்புரவு பணியாளர் மற்றும் நகரசபை ஊழியர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று கோலார் தங்கவயல் நகரசபை கமிஷனர் மாதவி கூறினார். அதன்படி நேற்று முன்தினம் துபு்புரவு பணியாளர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு துப்புரவு பணியாளர் நகரசபை ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் ஆண்களுக்கு கிரிக்கெட் போட்டி, குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்தநிலையில் 2-வது நாளான நேற்று பெண் துப்புரவு பணியாளர்களுக்கு மியூசிக்கல் சேர், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் அவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடினர்.