மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் 100 மினி மின்சார பஸ்கள் இயக்கம்-பி.எம்.டி.சி. திட்டம்
மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் 100 மினி மின்சார பஸ்கள் இயக்க பி.எம்.டி.சி திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் மெட்ரோ பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் 100 மினி மின்சார பஸ்களை இயக்க பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) முடிவு செய்துள்ளது.
அதாவது, பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்வதற்கு மெட்ரோ பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே அதை கருத்தில் கொண்டு பி.எம்.டி.சி. சார்பில் 100 மின் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் 20 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த பஸ்கள் மெட்ரோ பீடர் சாலைகள், மெட்ரோ ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், குறுகலான சாலைகளில் இயக்கப்பட உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.