டெல்லியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் - மகன் எடுத்த வீடியோவால் சிக்கினார்

டெல்லியில் பக்கத்து வீட்டு சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Update: 2023-06-29 20:23 GMT

புதுடெல்லி,

டெல்லியின் வடக்கு பகுதியில் சுமார் 65 வயதுடைய ஒருவர் தன் 40 வயது மகன் மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மத சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு உடையவர். இதன் நிமித்தம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுமியை தனியாக ஒதுக்குப்புறத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை முதியவரின் மகன் மறைந்திருந்து தனது செல்போனில் வீடியோ எடுத்தார். ஏற்கனவே முதியவருக்கும், அவருடைய மகனுக்கும் இடையே சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு பிறகு மோதல் அதிகரித்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மகன், அந்த வீடியோவை சிறுமியின் தந்தையிடம் காண்பித்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் போலீசுக்கு புகாராக சென்றது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்