உயிரிழந்த தாயின்ரூ.1 கோடி நகைகள், பணத்தை திருடியதாக அண்ணன், அண்ணி மீது போலீசில் புகார்

உயிரிழந்த தாய்க்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை தனது அண்ணனும், அண்ணியும் திருடிவிட்டதாக போலீசில் வியாபாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-04-21 18:45 GMT

மங்களூரு-

உயிரிழந்த தாய்க்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை தனது அண்ணனும், அண்ணியும் திருடிவிட்டதாக போலீசில் வியாபாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மூதாட்டி உயிரிழப்பு

உடுப்பி மாவட்டம் கோட்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட அச்லாடி பகுதியில் வசித்து வருபவர் கங்கா. இவருக்கு உமானந்தா ஷெட்டி மற்றும் சதானந்தா ஷெட்டி என 2 மகன்கள். இதில் வியாபாரியான சதானந்தா ஷெட்டி திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். உமானந்தா ஷெட்டிக்கும் திருமணமாகி விட்டது.

அவர் தனது தாய் கங்கா, மனைவி அபினி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மூதாட்டியான கங்கா திடீரென உடல்நலக்குறைவால் இருந்தார். அதையடுத்து அவரது இறுதிச்சடங்கு முடிந்து உடலும் புதைக்கப்பட்டது.

சொத்துகள் திருட்டு

இந்த நிலையில் கங்கா இறந்த பிறகு அவரது பெயரிலான அசையும் சொத்துகள், ஆயுள் காப்பீடு பத்திரங்கள், தங்க நகைகள், பணம் ஆகியவற்றை உமானந்தா ஷெட்டியும், அவரது மனைவியும் திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் இருக்கும் என்று கூறி கோட்டா போலீசில் சதானந்தா ஷெட்டி புகார் செய்தார். அதன்பேரில் கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்