ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்

Update: 2023-06-03 05:38 GMT
Live Updates - Page 3
2023-06-03 07:10 GMT

ஒடிசா சென்றடைந்த அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர்!

ரெயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய ஒடிசா சென்றடைந்த அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர்!

2023-06-03 07:03 GMT

ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆறுதல்

ரெயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்


2023-06-03 06:52 GMT

ஒடிசா ரெயில் விபத்து: மத்திய தொழில் பாதுகாப்பு உதவி ஆய்வாளர் மாமியார் - ஐந்து வயதுக்குழந்தை உயிர் தப்பினர்

சென்னை

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த நபர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் லிபானிதாஸ் இவர் சென்னை வரும் போது விபத்திற்குள்ளானார்.

இவரோடு ஐந்து வயதுக்குழந்தை மாமியாரோடு ரெயிலில் சென்னை வந்த போது விபத்தில் சிக்கிக்கொண்டார் லேசான காயமடைந்த அவர் சக பயணிகளைக் காப்பாற்றினார்.

தற்போது அரசு ஏற்பாடு செய்த ரெயிலில் 300க்கும் மேற்பட்டவர்களுடன அவர் சென்னை வந்து கொண்டிருக்கிறார்.

2023-06-03 06:23 GMT

ஒடிசா ரெயில் விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன...?

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து அறிந்து கொள்ள, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்காக அவசர கட்டுப்பாட்டு அறை அமைப்பு

தமிழ்நாடு அரசின் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் எண்கள்

9445869843

9445869848

044-2859 3990

2023-06-03 06:02 GMT

மீட்புப் பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி முதல் மந்திரி நவீன் பட்நாயக்

உள்ளூர் மக்கள் உதவியால் விபத்து நடந்த இடத்தில் முழுமையாக மீட்புபணிகள் முடிவடைந்து உள்ளன.

ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று நிலத்தடி மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.மேலும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைந் அடத்தினார்.

பாலாசோர் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளையும் பட்நாயக் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் நிறுபர்களுக்கு பேட்டி அளித்த நவீன் பட்நாயக் இது மிகவும் சோகமான ரெயில் விபத்து. இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரே இரவில் உழைத்த உள்ளூர் மக்களுக்கும், உள்ளூர் குழுக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். ரெயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.

2023-06-03 05:49 GMT

ஒடிசா ரெயில் விபத்து : பிரதமர் மோடி நேரில் ஆய்வு...!

ஒடிசா ரெயில் விபத்து குறித்த நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார்.

முன்னதாக ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி டுவீட் செய்து இருந்தார்.

2023-06-03 05:43 GMT


ஒடிசா ரெயில் விபத்து செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 280 பேர் பலி விபத்து நடந்தது எப்படி...?


ஒடிசா ரெயில்கள் விபத்து: பாலசோர் மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய குவிந்து வரும் கூட்டம்


உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாக பதிவான ஒடிசா ரெயில் விபத்து




ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு


கோர ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது - ஆய்வுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


ரெயில் விபத்து செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - எடப்பாடி பழனிசாமி




ஒடிசா ரெயில் விபத்து: இந்திய வரலாற்றில் மிக கொடிய 5 ரெயில் விபத்துக்கள்...!


ரெயில் விபத்து நடந்த பகுதியை பார்வையிட ஒடிசா செல்கிறார் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா


Tags:    

மேலும் செய்திகள்