புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது
குருநானக் ஜெயந்தியையொட்டி மத்திய அரசு விடுமுறை நாளாகும்.;
புதுச்சேரி,
புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை நாளை (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி மத்திய அரசு விடுமுறை நாளாகும். எனவே நாளை (நவ. 15) ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.