ஒடிசா ரெயில் விபத்து; பலி எண்னிக்கை 291 ஆக உயர்வு...!
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் என்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம் என்ற 17 வயது சிறுவன் இந்த ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, பாலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி 290 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் இன்று கட்டாக்கில் ஷோப் மன்சூர் என்ற பெண் சிகிச்சையின் போது மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்னும் 80 உடல்கள் அடையாளம் காணாமல் உள்ளன.