நுபுர் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது - டெல்லி போலீஸ்

அவதூறு கருத்து தொடர்பாக கடந்த ஜூன் 18-ந் தேதி நுபுர் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-01 16:17 GMT

புதுடெல்லி,

முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். அவருக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. எனவும்

மேலும், நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறுகையில், கடந்த ஜூன் 18- ந் தேதியன்று நுபுர் ஷர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.,சட்டத்தின் படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. என அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்