அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை: ராஜினாமா கோரிக்கையை நிராகரித்த ரயில்வே மந்திரி

ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Update: 2023-06-04 04:03 GMT

புதுடெல்லி,

ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள அஸ்வினி வைஷ்ணவ் இது தொடபாக கூறியதாவது:

ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், அனைத்திலும் வெளிப்படைத்தன்மை என்பது தேவை. நாங்கள் அதனையே கடைபிடிக்கிறோம். இந்த நேரத்தில் அரசியல் செய்வது சரியானது அல்ல. மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தருணம் இது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்