வீட்டில் தனியாக இருந்த சிறுமி கொலை.! ரூ.25 லட்சம் மாயம்: போலீசார் விசாரணை

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-07-18 18:46 GMT

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் நெய்டாவில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி, கழுத்தில் துணி கட்டப்பட்டு வாயில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் படுக்கையறையில் கிடந்துள்ளார்.

ஆயுர்வேத பயிற்சியாளரான சிறுமியின் தந்தை, தனது மனைவி மற்றும் இளைய மகளுடன் கிளினிக்கில் இருந்து மதியம் வீடு திரும்பினர். அப்போது சிறுமியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் சிறுமி உயிர் பிழைக்கவில்லை.

மேலும், வீட்டில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்கமும் காணாமல் போயுள்ளது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், சமீபத்தில் ஒரு சொத்தை விற்றதன் மூலம் ரூ.23.5 லட்சம் கிடைத்துள்ளது. மேலும் வீட்டில் ரூ.1.5 லட்சத்தையும் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்