வில், அம்பு சின்னத்தை சிவசேனாவிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது- உத்தவ் தாக்கரே திட்டவட்டம்

வில், அம்பு சின்னத்தை சிவசேனாவிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது என உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக கூறியுள்ளார்.;

Update:2022-07-08 19:14 IST

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி எதிராக திரும்பினார்.

மேலும் அவர் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இதில் கடந்த 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதில் கடந்த புதன்கிழமை ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த குலாப்ராவ் பாட்டீல் எம்.எல்.ஏ. வில், அம்பு சின்னத்தை பயன்படுத்த அவர்களுக்கு தான் உரிமை உள்ளது என கூறினார்.

இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாதோஸ்ரீயில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டத்தின்படி யாராலும் சிவசேனாவின் வில்,அம்பு சின்னத்தை பறிக்க முடியாது. சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகு தான் நான் இதை கூறுகிறேன். மக்கள் ஓட்டு போடும் போது கட்சியின் சின்னத்தை மட்டும் பார்ப்பது இல்லை, வேட்பாளர் யார், அவர் சிவசேனாவை சேர்ந்தவரா என்று தான் பார்ப்பார்கள்"என்றாா்.

Tags:    

மேலும் செய்திகள்