பணம், பொருட்களை திருடுவதைப் போல் கல்வி செல்வதை யாராலும் திருட முடியாது

பணம், பொருட்களை திருடுவதைப் போல் கல்வி செல்வத்தை யாராலும் திருட முடியாது என்று அரசு கல்லூரி ஆண்டு விழாவில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசினார்.;

Update:2023-09-15 00:15 IST

கோலார் தங்கவயல்

அரசு கல்லூரி ஆண்டு விழா

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் பொட்டேப்பள்ளியில் அரசு பட்டப்படிப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கிவைத்தார்.

அதை தொடர்ந்து பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் தனது சொந்த செலவில் மாணவ-மாணவிகளுக்கு, ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-

உதவிகள் வழங்க நடவடிக்கை

வறுமையில் உள்ள மாணவ-மாணவிகள் படிக்க அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த அரசு கல்லூரி பிரமாண்டமாக அமைந்துள்ளது. இந்த கல்லூரியை கட்ட பொதுமக்கள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தது பெருமையாக உள்ளது.

மேலும் இந்த கல்லூரியை வளர்ச்சி அடைய செய்ய பாடுபடுவேன். வறுமையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மேல் மட்டத்திற்கு வரவேண்டும் என்னுடைய விருப்பமாகும். கல்வியை யாரும் திருட முடியாது. பொதுவாக பணம், பொருட்களை மற்றவர்கள் திருடிச் சென்று விடுவார்கள்.

ஆனால் ஒருவரின் கல்விச் செல்வத்தை மட்டும் யாரும் திருடிச் சென்று விட முடியாது. எனவே மாணவர்கள் எந்த வறுமையில் இருந்தாலும் படிப்பில் மட்டும் கனத்தை செலுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும்.

இவ்வாறு ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்