சர்வதேச விமான பயணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை இல்லை - மத்திய அரசு
உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் பயணிகள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மட்டும் நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.