பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை இல்லை: சத்தீஷ்கார் அரசு அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்படும் என அம்மாநில முதல் மந்திரி தெரிவித்தார்.

Update: 2023-08-15 23:35 GMT

ராய்பூர்,

சத்தீஷ்காரில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சுதந்திர தினமான நேற்று அவர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் வருமாறு:-

* அரசு கல்லூரி மாணவ - மாணவிகளை இலவசமாக கல்லூரிக்கு அழைத்துவர வாகன வசதி செய்யப்படும்.

* அரசு பள்ளிகளில் 11, 12 படிக்கும் கிராமப்புற மாணவர்கள், மருத்துவ மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராகும் வகையில் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

* பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்படும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்கார குற்றங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் புரிந்தவர்கள் அரசு வேலைகளில் தடைசெய்யப்படுவார்கள்.

இதுபோன்ற பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

 

Tags:    

மேலும் செய்திகள்