கர்நாடக தேர்வாணைய அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

கர்நாடக தேர்வாணைய அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-08-23 15:26 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு அண்மையில் நடைபெற்று முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கர்நாடக தேர்வாணைய அலுவலகத்தில் தேர்வர்கள், அவர்களது பெற்றோர் உள்பட 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் தேர்வாணைய அலுவலகத்தில் குடிநீர் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தாமதமாக தொடங்கியதாகவும், இதனால் தேர்வர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்