பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா

ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்பார் என்று தெரிகிறது.

Update: 2022-08-09 10:33 GMT

பாட்னா,

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் அளித்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்பார் என்று தெரிகிறது.

பீகாரில் ஐஜத 45, ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 12 எம்.எல்.ஏக்களை சேர்த்து புதிய கூட்டணிக்கு சுமார் 160 உறுப்பினர்கள் உள்ளனர்.பீகாரில் மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏக்களின் சுமார் 160 பேரின் ஆதரவு ஐக்கிய ஜனதா தளம் ஆர்.ஜேடி கூட்டணிக்கு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்