'காலை 9.30 மணிக்கு அலுவலகம் வரவேண்டும்' மந்திரிகள் - அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் உத்தரவு

காலை 9.30 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-09-27 02:47 IST

பாட்னா, 

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று காலை பாட்னா பெய்லி சாலையில் உள்ள புதிய தலைமை செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தலைமை செயலகத்தில் பல மந்திரிகள் அவர்கள் அறையில் இல்லாததை கண்டு அதிருப்தி அடைந்தார். அதுபோல் மாநில திட்ட வாரியம், ஊரக பணித்துறை, சாலைக் கட்டுமானத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலகங்களை ஆய்வு செய்தார். அங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார், ''அனைத்து அதிகாரிகளும் காலை 9.30 மணிக்கு அலுவலகங்களுக்கு வரவேண்டும். எனது ஆய்வின் போது இல்லாதவர்கள் நேரத்திற்கு வராததற்கான காரணம் கேட்கப்படும்'' என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்