காங்கிரஸ் கட்சியில் இணையுங்களேன் என நண்பர் கூறினார்: நிதின் கட்காரி
காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கிணற்றில் கூட குதித்து விடுவேன் என்று நண்பரிடம் கூறியதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கிணற்றில் கூட குதித்து விடுவேன் என்று நண்பரிடம் கூறியதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி கூறியதாவது;-நான் மாணவராக இருந்த போது சிறப்பான எதிர்காலத்துக்காக, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு மூத்த தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார். ஆனால், நான் நான் கிணற்றில் விழுந்து மூழ்குவேனே தவிர காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன், ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே எனக்குப் பிடிக்கவில்லை என்று பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார்.