நவி மும்பையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

நவி மும்பையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-10-10 07:21 GMT

File image

தானே,

மராட்டிய மாநிலம் நவி மும்பை டவுன்ஷிப்பில் போதைப்பொருள் கடத்தல் பற்றி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தலோஜா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4.23 லட்சம் மற்றும் ரூ.21.2 லட்சம் மதிப்புள்ள 21.16 கிராம் மெபெட்ரோன் பவுடன் மற்றும் 106.74 கிராம் கொக்கைன் ஆகிய போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் இபியானி கிறிஸ்டியன் இயிடா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நைஜீரிய நபரை போலீசார் உள்ளூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை வரும் 14ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்