திருப்பதியில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் திரும்ப கிடைக்காது..

திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் வெப்கேம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-03-01 10:29 GMT

திருப்பதி,

திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் வெப்கேம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகளை தடுக்க, நவீன தொழில்நுட்பத்தை தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. அதன்படி, தங்கும் அறைக்கான ரசீதை வாங்குவோரின் முகம் வெப்கேமராவில் படம் பிடிக்கப்படுகிறது.

வேலை முடிந்து அவர்கள் அறைகளை காலி செய்யும் போது, வேப்கேமராவில் பதிவான அதே நபர் இருந்தால் மட்டுமே முன்பணம் திரும்ப செலுத்தப்படும். வேறொரு நபர் அறையை காலி செய்வதாக கூறினால், முன்பணம் திரும்ப செலுத்தப்படாது. இதனால், தரகர்களை நம்பி பணம் செலவழிப்பது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்