கர்நாடகத்தில் புதிதாக 211 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 211 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-25 22:10 GMT

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கர்நாடகத்தில் 21 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 93 பேர், ராமநகரில் 20 பேர், குடகில் 12 பேர் உள்பட 211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலபுரகியில் மட்டும் ஒருவர் இறந்தார். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 லட்சத்து 63 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 239 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்து 182 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 123 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 40 லட்சத்து 20 ஆயிரத்து 175 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்