நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Update: 2024-06-06 08:10 GMT

ஜெய்ப்பூர்,

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பகிஷா திவாரி (வயது18). 12-ம் வகுப்பு முடித்துள்ள இவர், ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென மாணவி, தான் வசிக்கும் கட்டிடத்தின் 9-வது மாடியில் இருந்து இருந்து குதித்தார். தற்கொலைக்கு முயன்ற மாணவியை தடுக்க அங்கிருந்தவர்கள் முயன்றும் முடியவில்லை. கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு மட்டும் கோட்டாவில் தேர்வுக்காக தயாராகி வந்த 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது மாணவர்களிடையே மனநலம் மற்றும் கல்வி அழுத்தம் தொடர்பான பிரச்சினையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்