கல்வி நிறுவனங்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
கல்வி நிறுவனங்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தினார்.
டெல்லி ஐ.ஐ.டி.யின் வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று பேசினார். அப்போது அவர் நாட்டின் கல்வி நிறுவனங்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இந்தியா ஒரு சிறந்த திறமை குழுவை கொண்டுள்ளது. அது இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. புதிய கற்பித்தல் மற்றும் கற்றல் அளவீடுகள், கற்பித்தல் மற்றும் உள்ளடக்கத்துடன் நமது கல்வி நிறுவனங்களின் எதிர்காலத்தை தயார்படுத்த வேண்டும்' என கேட்டுக்கொண்டார். ஐ.ஐ.டி.கள் நாட்டின் பெருமிதம் எனக்கூறிய முர்மு, அவற்றின் கதைதான் சுதந்திர இந்தியாவின் கதை என்றும் தெரிவித்தார்.