தொற்று பரவல் தொடர்ந்து வேகம்: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. 4 பேர் தொற்றால் பலியாகியும் இருக்கிறார்கள்.

Update: 2022-06-12 03:48 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் ஒரே நாளில் 8,582 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து வேகம் காட்டி வருகிறது. நேற்று முன் தினம் 7,584 நேற்று 8,329 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,582 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,13,435 லிருந்து 4,32,22,017 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 4,435 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 4,26,48,308 லிருந்து 4,26,52,753 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,370 லிருந்து 44,513 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,24,761 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 13,04,427 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 195.07 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு இத்தகவலை மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்