பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவின் டுவிட்டர் முகப்பு புகைப்படங்களில் தேசிய கொடி

நாட்டின் 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா தங்களது டுவிட்டரின் முகப்பு புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.

Update: 2022-08-02 04:39 GMT



புதுடெல்லி,



ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்து 75 வருடங்கள் ஆகியுள்ளன. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஓராண்டுக்கு விடுதலை பெருவிழாவாக இதனை கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தேசிய அளவில் ஹர் கர் திரங்கா பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றும்படி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

இதனை முன்னிட்டு, நாட்டின் 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தங்களது டுவிட்டரின் முகப்பு புகைப்படங்களை மாற்றியுள்ளனர். அதில், இருந்த பழைய படத்திற்கு பதிலாக நாட்டின் மூவர்ண கொடியை இடம் பெற செய்துள்ளனர்.




 

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, நாட்டிலுள்ள மக்களும் தங்களது சமூக ஊடகத்தின் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை வைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். நாட்டின் தேசிய கொடி எனப்படும் மூவர்ண கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்