வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி

விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Update: 2022-10-05 04:11 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான தருணம் அனைவரது வாழ்விலும் தைரியத்தையும், நிதானத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்