புனே-மும்பை இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு- ரெயில் சேவை பாதிப்பு

புனே-மும்பை இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-12 14:17 GMT

மும்பை,

மும்பை மத்திய ரெயில்வே புனேயில் இருந்து மும்பை வரும் வழித்தடத்தில் நாக்நாத்-பாலஸ்தாரி இடையே நள்ளிரவு 12.50 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது குகை நம்பர் 26-ம் பகுதியில் தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியில் இருந்த மோதிலால் என்பவர் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தகவல் குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் அந்த வழித்தடத்தில் ரெயில் என்ஜின் வந்து கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்ட தண்டவாள பராமரிப்பு பணியாளர் மோதிலால் தன்னிடம் இருந்த சிவப்பு கொடியை அசைத்து விபத்தில் சிக்க விடாமல் ரெயில் என்ஜினை நிறுத்தி உள்ளார்.

தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த வழித்தடத்தில் செல்ல இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புனே, லோனாலாலா மற்றும் கர்ஜத் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை மீட்கும் பணியில் ரெயில் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஊழியர்களை அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள், மண் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இன்று காலை 8.30 மணி அளவில் பாறாங்கற்கள் அகற்றப்பட்டு சரிசெய்யப்பட்டது. பின்னர் அந்த வழித்தடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். அதிர்ஷடவசமாக தண்டவாள பராமரிப்பு பணியாளர் மோதிலால் கொடுத்த தகவலின் பேரில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்