வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி கர்நாடக அரசுக்கு பல கோடி இழப்பீடு; கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி கர்நாடக அரசுக்கு பல கோடி இழப்பீடு ஏற்படுத்திய கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-14 22:43 GMT

பெங்களூரு:

வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ஒரு கும்பல், கர்நாடக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோரமங்களா, ராஜாஜிநகரில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த நிறுவனங்களுக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த நிறுவனத்தின் தகவல்களை திருடிய மர்மகும்பல் நிறுவனங்களில் பெயரில் வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியது தெரிந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் கும்பல் ஈடுபட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கேரளாவை சேர்ந்த டேனீஷ், விபின், சுபாஷ், பஜன் ஜோசப், சம்ருத் நாசீர் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், சிம் பாக்ஸ்கள், மடிக்கணினிகள், கணினிகள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்