உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவின் மனைவி மரணம்

உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா மரணமடைந்தார்

Update: 2022-07-09 11:24 GMT

லக்னோ

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா இன்று காலமானார். சாதனா குப்தா நுரையீரல் தொற்று காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார்.சாதனா குப்தாவின் உடல் லக்னோவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா தனது இரங்கலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், "முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா மறைவு என்ற சோகமான செய்தி கிடைத்தது, இறைவன் காலடியில் அவரது புனித ஆன்மா சாந்தியடையட்டும். முலாயம் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பை தாங்கிக்கொள்ள வேண்டும் தைரியம் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் தனது டுவிட்டர் பதிவில், "உத்தரப்பிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தாவின் மறைவு குறித்த மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது. முலாயம் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் வலிமை அளிக்கட்டும். இந்த இழப்பை தாங்கிக் கொள்கிறேன்இறந்த ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்