முலாயம்சிங்குக்கு 'பாரத ரத்னா' விருது கொடுத்திருக்க வேண்டும் - சமாஜ்வாடி கருத்து
‘பத்ம விபூஷண்’ விருது, கேலிக்கூத்தானது என்றும், முலாயம்சிங்குக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் சமாஜ்வாடி கருத்து தெரிவித்துள்ளது.;
லக்னோ,
சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவுக்கு மத்திய அரசு 'பத்ம விபூஷண்' விருது அறிவித்துள்ளது. அதற்கு சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சுவாமி பிரசாத் மவுரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
மறைந்த முலாயம்சிங்குக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக 'பத்ம விபூஷண்' விருது கொடுத்ததன் மூலம் அவரது அந்தஸ்து, பணிகள், நாட்டுக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.
முலாயம்சிங்கை கவுரவிக்க வேண்டுமானால், நாட்டின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' கொடுத்திருக்க வேண்டும். இனியும் தாமதம் செய்யாமல், இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.