கணவனுடன் சண்டை: மனமுடைந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
மத்திய பிரதேசத்தில் எலி மருந்து சாப்பிட்டதில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேசம் தார் என்ற பகுதியை சேர்ந்தவர் மம்தா பாய். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் இவரது கணவருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மம்தா பாய், எலி மருந்தை தண்ணீரில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்து உள்ளார். பின் அவரும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மம்தா தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரி(7) மற்றும் குணால்(3) ஆகிய 2 குழந்தைகள் உயிரிந்தனர். மம்தா மற்றும் அவரின் மற்றொரு மகளான சாக்ஷி(8) ஆபத்தன நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையில் சண்டைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தொிவித்தனர்.