மத்திய பிரதேசம்: சாலைவிபத்தில் 7 போ் பலி

மத்திய பிரதேசத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட சாலைவிபத்துகளில் சிக்கி 7 போ் உயிாிழந்து உள்ளனா்.15 போ் காயமடைந்து உள்ளனா்.;

Update: 2022-06-04 05:28 GMT

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மற்றும் சிங்ரௌலி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 3 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும்,15 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்து உள்ளனர்.

கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஹர்சுத் என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்கான சுமாா் 35 போ் டிராக்டாில் சென்றனா். நிகழ்ச்சி முடிந்த பின்னா் அவா்கள் தங்கள் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

அப்போது கிர்கியா-கல்வா சாலையில் டிராக்டா் வரும்போது தீடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.மேலும் பலா் காயமடைந்தனா்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கந்த்வா ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவா்களில் 6 போின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்ரௌலி மாவட்டத்தில் பைக் மீது டிரக் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 போ் உயிாிழந்தனா். இதில் பைக்கில் சென்ற பெண் ஒருவா் காயமடைந்தாா்.

விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசாா் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்