மத்திய பிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: முதல்-மந்திரி சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை அரசு தொடங்கும் என்று முதல்-மந்திரி சவுகான் அறிவித்துள்ளார்.;

Update:2023-01-30 03:01 IST

கோப்புப்படம்

போபால்,

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், மாநிலத்தில் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை தனது அரசு தொடங்கும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

நர்மதாபுரம் நகரில், நர்மதா நதிக்கரையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சவுகான் பேசும்போது, "ஐந்தாண்டுகளில் இந்த திட்டத்திற்காக ரூ.60,000 கோடி செலவிடப்படும் என்று கூறினார். மற்ற நலத்திட்டங்களின் பலன்களைப் பெற்றிருந்தாலும், அனைத்து பிரிவைச்சேர்ந்த ஏழை பெண்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடையலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்