பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கூடங்களில் வார விடுமுறையாக வெள்ளி கிழமை அறிவிப்பு

ஜார்க்கண்டை தொடர்ந்து பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்று கிழமைக்கு பதில் வெள்ளி கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-07-26 10:06 GMT



கிஷன்கஞ்ச்,



பீகாரில் மாநில கல்வி துறையை சேர்ந்த அதிகாரிகள் இன்று கூறும்போது, கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 5 பிளாக்குகளில் உள்ள 37 அரசு பள்ளி கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்று கிழமைக்கு பதில் வெள்ளி கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்த மாவட்டத்தில், போதியா பிளாக்கில் உள்ள 16 பள்ளி கூடங்கள் வெள்ளி கிழமை மூடப்பட்டும், ஞாயிற்று கிழமை திறந்தும் இருக்கும்.

இதேபோன்று, வைஷாலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது என மாவட்ட கல்வி அதிகாரி சுபாஷ் குமார் குப்தா கூறியுள்ளார்.

பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்று கிழமைக்கு பதில் வெள்ளி கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பீகாரின் கிழக்கு பகுதியில் கிஷன்கஞ்ச், அராரியா, கதிகார் மற்றும் புர்னியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30% முதல் 70% வரை முஸ்லிம் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.

இவற்றில் அதிக அளவாக அராரியா மாவட்டத்தில் மொத்தமுள்ள 229 அரசு பள்ளிகளில் 244 பள்ளிகளில் இந்த நடைமுறை உள்ளது. என கூறப்படுகிறது. புர்னியாவில் 200 மற்றும் கிஷ்ன்கஞ்ச் மாவட்டத்தில் 19 அரசு பள்ளிகளில் இந்நடைமுறைகள் உள்ளன என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும், இதற்கு அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லை என்றும் எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனவும் கல்வி துறையினர் கூறுகின்றனர். எனினும், முஸ்லிம் தலைவர்கள் அறிவுறுத்தலின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதனால், ஞாயிற்று கிழமைகளில் பள்ளிகளுக்கு செல்லும் ஆசிரியர்களால், தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட இயலவில்லை என சில ஆசிரியர்கள் கூறுகின்றனர் என இந்து சமூகத்தினர் சிலர் கூறியுள்ளனர்.

ஜார்க்கண்டிலும், ஜம்தரா மற்றும் தும்காவில் உள்ள பள்ளி கூடங்களில் விடுமுறை தினம் வெள்ளி கிழமையாக மாற்றப்பட்டு உள்ளது என இந்த மாத தொடக்கத்தில் செய்திகள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்