மோர்பி பாலம் விபத்து எதிரொலி; பிரதமர் திறந்து வைத்த அடல் பாலத்தில் புதிய கட்டுப்பாடு

அடல் பாலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 3 ஆயிரம் நபர்களை மட்டுமே அனுமதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2022-11-01 11:35 GMT

ஆமதாபாத்,

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில், குஜராத்தில் அமைக்கப்பட்ட அடல் பாலத்தை கடந்த ஆகஸ்ட் 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த 300 மீட்டர் பாலம் சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கிறது.

இந்த பாலம் சுமார் 12 ஆயிரம் பேரின் எடையை தாங்கும் திறன் கொண்டது ஆகும். இந்த நிலையில் அண்மையில் குஜராத் மாநிலம் மோர்பி தொங்கும் பாலத்தில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலியாக அடல் பாலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடல் பாலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 3 ஆயிரம் நபர்களை மட்டுமே அனுமதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்