குரங்கு அம்மை நோய்: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை..!
குரங்கு அம்மை நோய் தடுப்பு தொடர்பாக மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
குரங்கு அம்மை தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கலந்து கொண்டனர்.
குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தெரிய எவ்வளவு காலம் எடுக்கும், அறிகுறிகள் உள்ளவர்களை 7 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்துவது, குரங்கு அம்மைக்கான சிகிச்சை முறைகள், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களை கண்காணிப்பது, விமான நிலையலங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்துவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.